அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஏனைய தரப்பினர்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடவும், தமது பிழைகளை திருத்திக்கொள்ள முனைப்பு காட்டவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.செவ்வாய், 9 மார்ச், 2010
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் உயர்வடைந்துள்ளது - ஐக்கிய தேசியக் கட்சி..!
அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயல்களினாலேயே சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் உயர்வடைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. எவ்வாறெனினும், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு இலங்கை விவகாரம் தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கும் திட்டத்திற்கு ஐக்கிய தேசியக் கட்சி எதிர்ப்பு தெரிவிப்பதாக கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். அரசாங்கம் ஏனைய தரப்பினர்மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை விடவும், தமது பிழைகளை திருத்திக்கொள்ள முனைப்பு காட்டவேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.பிரித்தானிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர்..
பிரித்தானிய அதிகாரிகள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளனர். பிரித்தானியாவிற்கும் இலங்கைக்குமிடையில் அண்மையில் நிலவிவரும் முறுகல்நிலைமை குறித்து கலந்துரையாடும் நோக்கில் இந்த அதிகாரிகள் குழு இன்று இலங்கைக்கு வரவுள்ளதாகக் கூறப்படுகிறது. பிரித்தானிய வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபாண்ட் அண்மையில் க்ளோபல் தமிழ் போராம் அமைப்பினால் நடத்தப்பட்ட மாநாடு ஒன்றில் கலந்து கொண்டமைக்கு இலங்கை கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் பிரித்தானிய இராஜதந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.அவசரகால சட்டம் மேலுமொரு காலத்திற்கு நீடிப்பு..!
ஜெனரல் சரத்பொன்சேகா உண்ணாவிரதத்தைக் கைவிட்டுள்ளார்-அனோமா பொன்சேகா..!
உண்ணாவிரதமிருந்த ஜெனரல் சரத்பொன்சேகா அதனைக் கைவிட்டுள்ளதாக அவரது பாரியார் அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார். அவருக்கு வழங்கப்பட்டுள்ள தொலைபேசி ஊடகா இரண்டு மகள்மாருடனும் அழைப்பினை ஏற்படுத்துவதற்கு அவருக்கு அனுமதி வழங்கப்பட்டதையடுத்தே உண்ணாவிரதத்தை அவர் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றிரவு 11மணியளவில் ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு தனது தொலைபேசியை உபயோகிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டதாக அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் பிணையில் விடுதலை..!
விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் உபாலி சமரவீர இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். ஊவா பரணகம பொலீசாரினால் வெலிமடை நீதவான் நீதிமன்றத்தில் அவர் இன்று ஆஜர்படுத்தப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 50ஆயிரம் ரூபாய் றொக்கப்பிணையிலும் 01லட்சம் ரூபாய் வீதம் இரண்டு சரீரப் பிணைகளிலும் ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் உபாலி சமரவீரவை நீதவான் உத்தரவிட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது துப்பாக்கியைக் காட்டி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக ஊவா மாகாணசபையின் எதிர்க்கட்சித் தலைவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.பம்பலப்பிட்டி கடலில் அனர்த்தத்திற்கு உள்ளான கடற்படைப் படகு அப்புறப்படுத்தப்பட்டது..!
கொழும்பு பம்பலப்பிட்டி கடலில் நேற்றுமாலை அனர்த்தத்திற்கு உள்ளான கடற்படைப் படகை அந்தப் பிரதேசத்திலிருந்து அப்புறப்படுத்தியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். நேற்றுமாலை 3.30 மணியளவில் படகு அனர்த்தத்திற்கு உள்ளானபோது ஐந்து கடற்படை வீரர்கள் கடலில் வீழ்ந்ததாக கடற்படையின் ஊடகப் பேச்சாளர் கப்டன் அத்துல சேனாரத் தெரிவித்துள்ளார். கடலில் வீழ்ந்த கடற்படை வீரர்கள் ஐவரும் எவ்வித பாதிப்புமின்றி உயிர் தப்பியுள்ளனர். படகின் இயந்திரக் கோளாறு காரணமாகவே அனர்த்தம் இடம்பெற்றதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இதேவேளை குறித்த கடற்படைப் படகு அனர்த்தத்தில் சிக்கியபோது அதில் பொருத்தப்பட்டிருந்த கனரக ஆயுதமொன்றும் கடலில் மூழ்கிவிட்டதாகவும் அது மீட்கப்படவில்லையென்றும் கூறப்படுகிறது.தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தனது பிரதான நோக்கமாகும் - ஜனாதிபதி..!
தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதே தனது பிரதான நோக்கமென ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இதற்காகவே விவசாயிகளுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுத்து பாரிய குளங்களைப் புனரமைத்து தாம் நீர்ப்பாசனத்தைக் கட்டியெழுப்பியதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திஸ்ஸமகாறாமையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுதந்திர நாட்டில் தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணை வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார். சர்வதேச நாடுகளில் தயாரிக்கும் உணவுகளைப் பாவிக்காது உள்ளுரில் பொருட்களைப் பெற்றுக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதே தனது குறிக்கோள் என்றும் இதன்மூலம் ஏராளமானவர்களுக்கு தொழில் வாய்ப்புகளை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்குமென்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.ஐ.நா தனது உதவிச் செயலரை இலங்கை அனுப்புகிறார்..!
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் பான்கீ மூன், இலங்கையின் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பான நிபுணர்கள் குழுவை நியமிப்பதற்கு மகிந்த ராஜபக்ஷ தமது எதிர்ப்பை வெளியிட்டிருந்தபோதிலும், அது தொடர்பில் இலங்கை அரசுடன் கலந்துரையாடுவதற்கு தமது உதவி செயலாளரை இலங்கைக்கு அனுப்பவிருப்பதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது இது தொடர்பில கருத்து வெளியிட்ட பான்கீ மூன், இலங்கையின் மனிதஉரிமை நிலவரங்கள் மற்றும் இடம்பெயர்ந்தோர் உள்ளிட்ட விபரங்களை வழங்கும் பொருட்டு இந்த குழு நியமிக்கப்பட்டது. இது தொடர்பில் மகிந்த ராஜபக்ஷவுக்கு தெளிவுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதன் மேலதிக தெளிவுபடுத்தலுக்காக விரைவில் தமது அரசியல்துறை சார் உதவி செயலாளர் லியான் பொஸ்கோவை இலங்கைக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.நீண்டகாலமாக நிரந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் விசேட திட்டம்..!
நீண்டகாலமாக நிரந்த வீடுகள் இல்லாதவர்களுக்கு புதிய வீடுகளை வழங்கும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் புனிதபூமி அபிவிருத்தியமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். அருணோதயா மற்றும் குடிசைகள் அற்ற நகரமைப்பு திட்டங்களின் கீழ் புதிய வீடுகள் வழங்கப்படவுள்ளது. கொழும்பு கொம்பனித்தெரு பேரைக் குளத்திற்கு அருகாக செல்லும் ரயில் பாதையை அண்மித்த பகுதியில் வாழ்ந்துவந்த 276குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டு அந்தக் குடும்பங்கள் புதிய வீடுகளில் குடியேறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் வழிகாட்டலின்கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு நிரந்தர வீடுகள் இல்லாதவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். இந்த திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 1000வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவுள்ளதாகவும் ஏற்கனவே 250 வீடுகள் கட்டப்பட்டு விட்டதாகவும் அடுத்தமாதம் மேலுமொரு தொகுதி வீடுகள் கட்டப்பட்டு விடுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பொலீஸ் சிறையிலிருந்து தப்பிச்சென்ற இருவர் பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு..!
பொலீஸ் சிறைக்கூண்டிலிருந்து தப்பிச்சென்ற சந்தேகநபர்கள் இருவர் பொலீசாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர். குருநாகல் மாவட்டம் வெல்லவ பகுதியில் இந்த சம்பவம் இன்றுஅதிகாலை இடம்பெற்றுள்ளது. காவலுக்கு இருந்த பொலீசாரைத் தாக்கிவிட்டு துப்பாக்கியொன்றை அபகரித்து சந்தேகநபர்கள் இருவரும் சிறைக்கூண்டின் கூரையின் ஊடாக வெளியேறி முச்சக்கர வண்டியொன்றில் ஏறி தப்பிச் சென்றதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபர்களை விரட்டிச் சென்ற பொலீசார் காட்டுப்பகுதியொன்றில் வைத்து நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபர்கள் இருவரும் பலியானதாக பொலீசார் தெரிவித்துள்ளனர். தப்பிச் சென்றவர்களின் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்த பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலீசார் மேலும்தெரிவித்துள்ளனர்.தேர்தல் தொடர்பிலான வன்முறைகள் அதிகரிப்பு..!
பொதுத் தேர்தல் தொடர்பிலான வன்முறைகளின் எண்ணிக்கை துரிதமாக அதிகரித்துச் செல்வதாக தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். தேர்தல் வன்முறைகள் தொடர்பில் தம்மிடம் இதுவரை 24 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சுதந்திரமானதும் நியாயமுமான தேர்தலுக்கான மக்கள அமைப்பான கபே தெரிவித்துள்ளது. வார இறுதியில் தேர்தல் வன்முறைகள் மற்றும் சட்டவிரோத பிரச்சாரங்கள் நாட்டின் சகல பகுதிகளிலும் இடம்பெறுவதை அவதானிக்க முடிவதாக கபே அமைப்பின் ஊடக அமைப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார். அத்துடன் சகல பகுதிகளிலும் சட்டவிரோத பதாதைகளையும், சட்டவிரோத தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளையும் காணக்கூடியதாக உள்ளதென்றும் அவர் கூறியுள்ளார். இத்தகைய தேர்தல் சட்டமீறல்களே வன்முறைகள் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்துள்ளதென்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை தேர்தல் சட்டமீறல்கள் தொடர்பில் 26சம்பவங்கள் தம்மிடம் பதிவாகியிருப்பதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு நிலையம் தெரிவித்துள்ளது.மனோகணேசன் நாடாளுமன்றத்தில் சுலோகம் ஏந்திப் போராட்டம்..!
ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் கண்டி மாவட்ட வேட்பாளருமான மனோ கணேசன் நாடாளுமன்றம் கூடியவேளை சுலோகம் ஏந்திப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகின்றது. பிரதமர் அவர்களே, கண்டி மாவட்டத்தில் நாவலப்பிட்டி நகரத்தில் அராஜக கமகே அரசியலை உடனடியாக தடுத்துநிறுத்தி நீதியும் நியாயமானதுமான தேர்தலை உறுதி செய்யுங்கள் என சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்தது. கண்டி மாவட்டத்தில் அராஜகமான அரசியல் சூழ்நிலை நிலவுவதாகவும் இதனால் மக்களின் சுதந்திரம் பாதிக்கப்படுவதாகவும் அங்கு அவர் தெரிவித்திருந்தார். ஆளும் கட்சியில் கண்டி மாவட்ட வேட்பாளரான மஹிந்தானந்த அளுத் கமகேவின் தேர்தல்பிரசார நிலையமாக நாவடிப்பிட்டி பொலிஸ் நிலையம் இயங்குவதாக மனோகணேசன் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருந்தார். பெரும்பான்மை இனத்தவர்களின் இவ்வாறான செயற்பாடுகளை வெளிச்சத்துக்குக் கொண்டுவருவதன் மூலமே மக்கள் உண்மைகளை தெரிந்துகொள்ளக் கூடியதாக உள்ளது என வேட்பாளர் மனோ கணேசன் ஊடகமொன்றுக்கும் தெரிவித்துள்ளார்.வன்னி யுத்தகளத்தில் களவாடப்பட்ட ஒருதொகை தங்கநகை கலேவெலவில் கண்டுபிடிப்பு..!
முல்லைத்தீவு புதுமாத்தளன் பகுதியிலிருந்து களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படும் ஒருதொகை தங்கம் கலேவெல புலனவெலவில் இருந்து கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாக கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். இதுபற்றி மேலும் தெரியவருகையில் முல்லைத்தீவு புதுமாத்தளன் யுத்தகளத்திலிருந்து களவாடப்பட்டதாக தெரிவிக்கப்படும் 40பவுண் பெறுமதியுள்ள தங்க நகைப் பொதியொன்று கலேவெல புலனவெல ஆற்றுக்கு பக்கத்தில் உள்ள காடொன்றில் புதைக்கப்பட்ட நிலையின் தோண்டப்பட்டு எடுக்கப்பட்டது என கலேவெல பொலிஸார் தெரிவித்தனர். இறுதிக்கட்ட யுத்தத்தின் போது அக்காலத்தில் கடமையாற்றிக் கொண்டிருந்த இராணுவவீரர் ஒருவரினாலேயே இந்ததங்க நகைப்பொதி களவாடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் இவர் இதில் ஒருபங்கை எட்டு இலட்சரூபாவுக்கு விற்றுவிட்டு மிகுதியை இக்காட்டில் புதைத்து வைத்திருந்த நிலையிலேயே கண்டுபிடித்ததாகவும் இதுதொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கலேவெல பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.புலிகளுக்கு ஆதரவான அமைப்புகள் பிரபாகரனைத் தேடி வருகின்றனவாம்..
விடுதலைப்புலிகளின் ஆதரவான அமைப்புகள் இன்றும் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை தேடிவருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இவ்விடயம் குறித்து இந்தியாவுடன் கலந்துரையாடப் படவுள்ளதாகவும் இந்திய வெளிவிவகார செயலாளர் நிருபமாராவுடன் இவ்விடயம் குறித்து அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம உரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் ஒருமைப்பாட்டையும் இறையான்மையையும் பாதுகாக்க விழிப்புடன் செயற்படுவோம் எனவும் நிருபமாராவிற்கு ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதார அபிவிருத்தி பற்றியும் பேசப்பட்டதாக மேலும் தெரிவித்தார்.பதுளை இயந்திரம் விழுந்து தொழிலாளி உயிரிழப்பு, இருவர் காயம்..
கிண்ணம் சின்னத்தில் போட்டியிடும் ஒருவரேனும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானால் நான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கப் போவதில்லை-அமைச்சர் மேர்வின் சில்வா..!
கிண்ணம் சின்னத்தில் போட்டியிடும் ஒருவரேனும் நாடாளுமன்றத்திற்கு தெரிவானால் தான் நாடாளுமன்றத்திற்கு பிரவேசிக்கப் போவதில்லையென அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவ்வாறான நிலை வந்தால் தாம் சத்தியப் பிரமாணம் செய்துகொள்ளப் போவதில்லையென்றும் அவர் கூறியுள்ளார். ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி அவசரகால சட்ட பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றினார். இதன்போது குறுக்கிட்டுப் பேசியபோதே அமைச்சர் மேர்வின் சில்வா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் நாட்டுக்கு துரோகமிழைத்த ஜெனரல் சரத்பொன்சேகா குறித்து உரையாற்றுவதற்கு அனுமதிக்கக் கூடாதென்றும் அவர் இதன்போது கேட்டுக்கொண்டார்.நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் தீவிபத்து..!
புத்தளம் கற்பிட்டி நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் தீவிபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து இன்று அதிகாலை 1மணியளவில் ஏற்பட்டுள்ளதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். குறித்த அனல்மின் நிலையத்தில் ஏற்பட்ட தீயினை கடற்படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து தமது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்துள்ளதாகவும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இதன்போது தண்ணீர் குழாய்களும் பிளாஸ்ரிக் பொருட்களும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தீவிபத்து எவ்வாறு ஏற்பட்டது என்பது தொடர்பிலான விசாரணைகளை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.புத்தள பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு..!
மொனறாகலை வெல்லவாய புத்தள பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து நேற்றுப் பிற்பகலில் இடம்பெற்றிருப்பதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். தனியார் பஸ் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதுண்டதால் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்த நிலையில் புத்தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை புத்தள பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கி ஒருவர் கொலை..!
இரத்தினபுரி குருவிட்ட பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றதாக பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். குறித்த நபர் இனந்தெரியாத நபர்களினால் தாக்கப்பட்டு இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையிலேயே உயிரிழந்திருப்பதாகவும் பொலீஸ் ஊடகப்பேச்சாளர் பொலீஸ் அத்தியட்சகர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார். சந்தேகநபர்கள் எவரும் இதுவரை கைதாகாத நிலையில் குருவிட்ட பொலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மாத்தறையின் வலஸ்முல்லை பகுதியில் இருகுழு துப்பாக்கிச்சூடு, மூவர் காயம்..!
மாத்தறை வலஸ்முல்ல பகுதியில் இரு குழுக்களிடையே இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று பிற்பகலில் இடம்பெற்றதாக வலஸ்முல்ல பொலீசார் தெரிவித்துள்ளனர். இரு குழுக்களிடையேயான தனிப்பட்ட பிரச்சினையே இந்த மோதலுக்குக் காரணமென்றும் பொலீசார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வலஸ்முல்லை பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.2015ம் ஆண்டாகும்போது வறுமை முற்றாக ஒழிக்கப்படும்-அமைச்சர் ராஜித சேனாரத்ன
2015ம் ஆண்டாகும்போது இலங்கையிலிருந்து வறுமை முற்றாக ஒழிக்கப்படும். தற்பொழுது 2வது உலக நாடாக வளர்ந்துவரும் இலங்கை மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்வரும் 6வருட ஆட்சிக்காலத்தில் 1ம் உலகநாடாக வளர்ச்சியடையும். தலைசிறந்த நாட்டுத் தலைவரும் பலமான அரசாங்கமும் உள்ள நாடுகளே துரிதமாக அபிவிருத்தி கண்டுள்ளன. எமக்கு தலைசிறந்த தலைவர் கிடைத்துள்ளதோடு பலமான அரசாங்கமொன்றை அமைக்கவே மக்கள் ஆணையை கோருவதாக நிர்மாணத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ஐ.ம.சு.முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. அங்கு கருத்தத் தெரிவித்த அமைச்சர், ஐ.ம.சு.முன்னணிக்கு 3ல் 2 பெரும்பான்மை பலம் கிடைப்பதை தடுப்பதே எதிர்க்கட்சிகளின் பிரதான தேர்தல் கோசமாக உள்ளது. யுத்தத்திற்கு முடிவுகட்டிய எமது அரசாங்கம் வறுமையை ஒழிக்கும் 2வது யுத்தத்தை ஆரம்பித்துள்ளது. 1995களில் 29 வீதமாக இருந்த வறுமைவீதம் 2009ல் 15ஆக குறைந்துள்ளது- 2015 16 ஆண்டாகும்போது வறுமையை முற்றாக ஒழிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இதற்கு மக்கள் ஆணை தேவை. சர்வதேச நாணயநிதியம் வறியநாடு என்ற பட்டியலில் இருந்து இலங்கையின் பெயரை அகற்றியுள்ளது. தெற்காசிய நாடுகளிடையே வறியநாடு என்ற பட்டியலிலிருந்து அகற்றப்பட்டுள்ள முதலாவது நாடு இலங்கையாகும். மூன்றாம் உலக நாடாக உள்ள இலங்கை இரண்டாம் உலக நாடாக வளர்ந்து வருகிறது. எதிர்வரும் 6வருட காலத்தில் முதலாம் உலகநாடாக இலங்கையை அபிவிருத்தி செய்வதற்கு ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார். எதிர்வரும் காலத்தில் இளைஞர்கள் தொழில் தேடி விண்ணப்பங்களு டன் அலையும் நிலை ஏற்படாது. உள்நாட்டு வெளிநாட்டு சந்தைகளுக்கு ஏற்றவாறு எமது கல்விமுறை மாற்றப்படும். 2012ம் ஆண்டாகும்போது அனைவருக்கும் மின்சாரம் வழங்கப்படும். தற்பொழுது 87 வீதமானவர்களுக்கே மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. சகலருக்கும் குடிநீர் வசதியளிக்கும் வகையில் பாரிய குடி நீர்த்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு இந்தியா ஆர்வம்..!
யாழ்ப்பாணத்தில் இந்திய தூதரக அலுவலகத்தை விரைவில் ஆரம்பிப்பதற்கு இந்தியா ஆர்வமாக உள்ளதாக இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் கூறியுள்ளார். இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு செயலர் நிருபமா ராவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது, யாழ்ப்பாணத்தில் உள்ள மக்களுடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளும்வகையில், அங்கு இந்திய தூதரக அலுவலகத்தை அமைக்க, இந்திய அரசு ஆர்வமாக உள்ளது. இது குறித்து, ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷயுடன் பேசியபோது, அவர் சாதகமாக பதிலளித்தார். இதன்மூலம், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு, மேலும் பலப்படும். உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்ட மக்களை, மறு குடியமர்த்தும் இலங்கை அரசின் நடவடிக்கைக்கு இந்தியா உதவும். இலங்கை வடக்கு பகுதி மக்கள், மீண்டும் அமைதியான சூழ்நிலையில் வசிக்க வேண்டும் என விரும்புகின்றனர். அவர்கள் பயங்கரவாதத்துக்கு ஆதரவானவர்கள் அல்ல என்றும் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வோரினால் வருமானம் உயர்வடைவு..!
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வோரினால் ஈட்டப்படும் வருமானம் உயர்வடைந்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது. 2008ம் ஆண்டுடன் ஒப்பீடு செய்யும்போது 2009ம்ஆண்டில் வெளிநாட்டு பணியாளர்களின் வருமானம் 14வீதத்தினால் உயர்வடைந்துள்ளது. 2008ம் ஆண்டில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றவர்களினால் 2.9பில்லியன் அமெரிக்க டொலர்பணம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனினும், 2009ம் ஆண்டில் இந்தத் தொகை 3.3 பில்லியனாக உயர்வடைந்துள்ளது. வெளிநாடுகளில் பணியாற்றி வரும் வீட்டுப் பணிப்பெண்களுக்கான சம்பளஉயர்வு காரணமாக இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 2009ம் ஆண்டில் 247,119பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதாகவும், இதில் 43,744பேர் கட்டாரில் வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்றுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.அரசியல் எதிர்ப்புகளை புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யவும்-மனோகணேசனுக்கு மல்வத்தை பீடாதிபதி அறிவுரை..!
அரசியல் காரணங்களை முன்வைத்து நடத்தப்படும் எந்த எதிர்ப்புகளையும் புறந்தள்ளிவிட்டு கடமையை செய்யுமாறு கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே சிறீசுமங்கள தேரர், ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். கண்டி மல்வத்தை பீடத்திற்கு சென்று மகாநாயக்கரை மனோகணேசன் சந்தித்தபொழுது இந்த கருத்தை பீடாதிபதி தெரிவித்துள்ளார். இத்தொடர்பில் ஜனநாயக மக்கள் முன்னணி விடுத்துள்ள செய்திக்குறிப்பில், உங்களுக்கு எதிராக கண்டி மாநகரத்தில் ஜாதிக ஹெல உறுமய கட்சி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்ததை நானும் அறிவேன். இதுபற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதற்கு முன்னர் ஒருமுறை தமிழ் தேசிய கூட்டமைப்பை நான் சந்தித்ததை காரணங்காட்டி எனக்கு எதிராகவும் இதே கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். புலிகளை கண்டிக்கு நான் கொண்டுவந்தாக கூறி பிரசாரம் செய்தார்கள். இந்நிலையில் இன்று உங்களுக்கு எதிராக காட்டப்படும் எதிர்ப்புகளை கணக்கில் எடுக்கவேண்டாம். உங்கள் கடமையை நீங்கள் செய்யுங்கள். அதன்மூலமாக நீங்கள் வெற்றிபெற்று வருவீர்கள். இந்நாட்டிலிலே பிறந்த ஒவ்வொரு பிரஜைக்கும் இந்நாட்டின் எந்தவொரு மாவட்டத்திற்கும் சென்று தேர்தல்களில் போட்டியிடுவதற்கு உரிமை இருக்கின்றது. கண்டி மாவட்டத்திலே பெருந்தொகையான தோட்டத் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். அவர்களது வறுமைநிலைமை மாற்றப்படவேண்டும். கடந்த காலங்களில் கண்டி ஹந்தானை பகுதியிலே வாழ்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு எமது மல்வத்தை பீடத்தின்மூலம் வீடுகள் கொடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த பின்தங்கிய தோட்டத் தொழிலாளர்களுக்கு நீங்கள் வெற்றிபெற்று பெரும் பணியாற்ற வேண்டும். தமிழ் மக்களுடன் சிங்கள, முஸ்லிம் மக்களையும் அரவணைத்துக் கொண்டு நீங்கள் செயற்படவேண்டும். இந்நாட்டிலே யுத்தம் முடிவிற்கு வந்துவிட்டதால் எல்லா பிரச்சினைகளும் முடிவிற்கு வந்துவிட்டதாக அர்த்தப்படாது. வடக்கிலே இடம்பெயர்ந்த மக்கள் முழுமையாக குடியமர்த்தப்படவில்லை என்பது எனக்கு தெரியும். நான் சில மாதங்களுக்கு முன்னர் வவுனியா முகாமக்களுக்கு பொருட்களை அனுப்பி வைத்திருந்தேன். எதிர்க்காலத்தில் யாழ்ப்பாணம் செல்வதற்கு எண்ணியுள்ளேன். இந்நாட்டிலே அரசியல்வாதிகளுக்கு பணியாற்றுவதற்கு நேரமில்லை என்பதாக தோன்றுகிறது. ஏனென்றால் இந்த அரசாங்கம் ஒன்றின் பின் ஒன்றாக தேர்தல்களை நடத்திக்கொண்டிருக்கின்றது என கண்டி மல்வத்தை பீடாதிபதி திப்பட்டுவாவே சிறீசுமங்கள தேரர் தெரிவித்தார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.பொதுத் தேர்தலில் 85வீதமான முஸ்லிம்கள் ஆளும் கட்சிக்கே வாக்களிக்கவுள்ளனர்-அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி..!
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் 85 வீதமான முஸ்லிம்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களிக்க உள்ளனர். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமின் தவறான பிரசாரம் காரணமாக முஸ்லிம்கள் எதிர்தரப்பிற்கு வாக்களித்த போதும் இம்முறை மக்கள் உண்மை நிலையை உணர்ந்து ஜனாதிபதியின் கரத்தை பலப்படுத்த தீர்மானித்துள்ளனர் என அமைச்சர் ஏ.எச்.எம். பௌஸி தெரிவித்துள்ளார். ஐ.ம.சு.முன்னணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று மகாவலி நிலையத்தில் நடைபெற்றது. இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி 3ல் 2 பெரும்பான்மை பலத்தை பெறுவது உறுதி. இந்த வெற்றிக்கு முஸ்லி ம்கள் அதிக பங்களிப்புச் செய்யவுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்கீழ் முஸ்லிம் மக்கள் அச்சமின்றி வாழும் சூழல் உருவாகியுள்ளது. எனவே இம்முறை தேர்தலில் ஐ.ம.சு.முன்னணிக்கு வாக்களிக்க முஸ்லிம் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.விசேட அடையாள அட்டையில்லாத வேட்பாளர்களுக்கு வாக்கெண்ணும் நிலையங்களுக்குச் செல்ல அனுமதியில்லை..!
புலிகளின் சட்டப்பிரிவில் பணியாற்றிய பெண் ஒருவரும் அவரது இரு பிள்ளைகளும் கிறிஸ்மஸ்தீவில்..!
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை-ஐ.நா செயலர்..!
யுத்தத்தின் பின்னரான இலங்கையில் எதிர்பார்த்தளவு அபிவிருத்தி ஏற்படுத்தப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் பொதுச்செயலாளர் பான் கீ மூன் தெரிவித்துள்ளார். குறிப்பாக பான் கீ மூனின் இலங்கை விஜயத்தின்போது இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்த விடயங்களில் உரிய அபிவிருத்தி எட்டப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். பான் கீமூன் கடந்த வருடம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டாக இணைந்து அறிக்கை ஒன்றிணை வெளியிட்டிருந்தார். குற்றச் செயல்களுக்கு தண்டனை வழங்குவது தொடர்பில் தமக்கு ஆலேசானை வழங்குவதற்காக விசேட நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்கத் தீர்மானித்துள்ளேன். இந்த காரணத்திற்காக அரசியல் விவகார விசேட பிரதிநிதி லியான் பெஸ்கோ விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நேர்மையான முறையில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டுள்ளது. இடம்பெயர் மக்கள் நிலைமை, அரசியல் தீர்வுத்திட்டம் மற்றும் குற்றச்செயல்களுக்கு தண்டனை வழங்குதல் போன்ற விவகாரங்கள் குறித்து தமது தொலைபேசி உரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கமே இந்நாட்டில் மிகவும் திறமையாக இயங்கிவந்த கூட்டுறவு சங்கங்களை முடங்க வைத்தது-பந்துல குணவர்தன..!
1977ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஜே.ஆர் அரசாங்கமே இந்நாட்டில் மிகவும் திறமையாக இயங்கிவந்த கூட்டுறவு சங்கங்களை முடங்க வைத்தது. மக்களுக்கு பாரிய சேவைகளை வழங்கிவந்த கூட்டுறவுத் துறையை இயங்கவிடாது இந்நாட்டில் திறந்த பொருளாதார வர்த்தகத்துறையை அறிமுகப்படுத்தி நாசப்படுத்திவிட்டனர். இன்று எமது ஜனாதிபதியின் ஆலோசனையின்கீழ் மீண்டும் முறையாக கூட்டுறவு சங்கங்களை இயங்கவைத்து வருகின்றோம் என வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மருதானையில் வரையறுக்கப்பட்ட சுகாதரத் திணைக்கள கூட்டுறவு சிக்கனக் கடனுதவிச் சங்கத்திற்கான புதிய ஐந்துமாடிக் கட்டடத்தை திறந்து வைத்தபின்னர் இடம்பெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அமைச்சர் பேசுகையில், திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்திய ஜே.ஆர். தன்னால் பெண்ணை ஆணாகவும், ஆணை பெண்ணாகவுமே மாற்ற இயலாது என்றும் அவர் தெரிவித்துள்ளாhஇலங்கைக்கு எதிராக மனித உரிமைமீறல் பிரேரணையொன்றை முன்வைக்க சில மேலைத்தேய நாடுகளும், புலிகளுக்கு ஆதரவான சக்திகளும் முயற்சி..!
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு நீதிமன்றக் குழு..!
ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கான நீதிமன்ற குழுவை முப்படைகளின் தளபதியான ஜனாதிபதி நியமிப்பார் அல்லது அவரது ஆலோசனையின் பிரகாரம் இராணுவத்தளபதி நியமிப்பார் என்று இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இராணுவ பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதியும் முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிராக இராணுவ சட்டத்தின்கீழ் ஐந்துக்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. இராணுவத்தினர் 22பேர், 06பொலிஸார் மற்றும் சிவிலியன்கள் ஆறுபேர் அடங்கலாக 35பேர் சாட்சியமளித்துள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்றுக்காலை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் கருத்து தெரிவிக்கும்போதே இராணுவத்தளபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.வடபுல முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல் ஒருபோதுமே சாத்தியப்படாது-அமைச்சர் ரிசாத்..!
வடபுல முஸ்லிம்களுக்கு எதிர்க்கட்சி அரசியல் ஒருபோதுமே சாத்தியப்படாது. அரசியல் அதிகாரம் இருந்தால் மட்டுமே எமது பிரதேசத்தின் அபிவிருத்திகளை முன்னெடுத்துச் செல்ல முடியுமென ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளரும், மீள்குடியேற்றம் மற்றும் அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சருமான றிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார். புத்தளம் மாவட்டம் கல்பிட்டி தில்லையூரில் நேற்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.ஜெனரல் சரத்பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் தொகுப்பறிக்கை..!
மிக நீண்டகாலமாக இருந்துவரும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளது-இந்திய வெளியுறவுச் செயலாளர்..!
இந்தியா, இலங்கையுடன் இணைந்து கல்வித்துறை மேம்பாடு தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதன்மூலம் மிக நீண்டகாலமாக இருந்துவரும் இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவு மேலும் வலுவடைந்துள்ளதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார். கண்டி - பெனிதெனியவில் அமைந்துள்ள ஆங்கில ஆசிரியர்களை பயிற்றுவிக்கும் கல்வி நிலையத்தில் இந்தியா-இலங்கை ஆங்கிலம் கற்றல் தொடர்பான ஆசிரியர் மத்திய நிலையமொன்றையும் மொழியியல் கூடமொன்றையும் நேற்றுமுன்தினம் திறந்து வைத்தார். இது தொடர்பான நிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையிலேயே செயலாளர் நிருபமா ராவ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இரு நாடுகளுக்குமிடையில் இவ்வாறு ஆங்கில அறிவு தொடர்பான விருத்திகளை முன்னெடுத்து செல்ல மஹிந்த சிந்தனைத் திட்டம் உறுதுணையாக விருந்தது எனவும் கூறியுள்ளார்.மகள்மாருடன் பேச மாத்திரமே சரத்பொன்சேகா தொலைபேசி பயன்படுத்தலாம்..!
தடுப்புக் காவலிலுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா அவரது மகள்மாருடன் தொடர்புகொள்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற நிபந்தனையின்பேரில் நேற்றுமுதல் அவருக்கு கையடக்க தொலைபேசியை பாவிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரசாத் சமரசிங்க கூறியுள்ளார். தேசிய பாதுகாப்பு ஊடக நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இராணுவ தளபதியின் சிறப்புரிமையின் பேரிலேயே சரத் பொன்சேகாவுக்கு கையடக்க தொலைபேசி மகள்மாருடன் மட்டுமே பேசவேண்டும் என்ற நிபந்தனையுடன் வழங்கப்பட்டுள்ளதே தவிர வேறு எவரினதும் உத்தரவின்பேரில் அல்ல என்றும் இராணுவப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம்-நாமல் ராஜபக்ச..!
பலமான குடும்ப உறவே பலமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம். இதனைக் கொள்கையாகக் கொண்டு நாட்டைக் கட்டியெழுப்புவதில் ஒன்றிணைந்து அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியமென இளைஞர்களுக்கான நாளை அமைப்பின் தலைவரும் ஜனாதிபதியின் புதல்வரும் வேட்பாளருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை சியபோபுர சிங்கப்பூர் நட்புறவு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற தேசிய மகளிர்தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்நாட்டில் இளைஞர்கள் படையிலிருந்து விடுமுறைக்கு வீட்டிற்கு வரும்போதும் பாடசாலை பல்கலைக்கழ கத்துக்குப் போய் மீள வீடு திரும்பும்வரை பெற்றோர் அஞ்சி நடுங்கிய யுகம் ஒன்றிருந்தது. இதன்போது உள, உடல் ரீதியில் எவரும் பீடனைக்குள்ளானவர்கள் எமது தாய்மாரே. எமது சகோதரரும் கடற்படை யில் கடமைபுரிவதால் பயங்கரவாத யுத்தம் இடம்பெற்ற காலத்தில் எமது பெற்றோரும் இத்தகைய தாக்கங்களுக்கே உள்ளானார்கள் என என்னால் கூறமுடியும். இலங்கையைப் பொறுத்தவரை நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்களிப்பினை பெண்களே வழங்குகின்றனர். வீட்டின் பொருளாதாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு என்பவற்றை இதில் முக்கியமாகக் குறிப்பிட முடியும். பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு தற்போது அமைதி சூழல் நிலவுகிறது. இதனால் நிம்மதியடைந்தவர்கள் எமது தாய்மாரே. இதனால் எமது கலாசாரம் தேசியத்துவம் கட்டியெழுப்பப்பட்டு வருகிறது. எனது முன்னேற்றத்தில் எனது பெற்றோரினது பங்களிப்பு முக்கியமானது. எனது தாயாரிடம் நான் கற்ற பாடமே எனக்குப் பெரிதும் உந்துதலளித்தது. அரசியலில் எனது தந்தையாரின் வழிகாட்டல் எனக்கு உதவியது. இதுவே எனக்கான அரசியல் சூழலை உருவாக்கித் தந்தது. இந்நாட்டில் பெண்களின் பொருளாதாரம் சக்திபடுத்தப்பட வேண்டும். அரசியலில் பொருளாதார ரீதியில், தொழில்நுட்பத்துறையில் பெண்கள் முன்னேற்றப்பட வேண்டும். அவர்களின் பங்களிப்பு அதிகரிக்கப்பட வேண்டும். அத்துடன் பெற்றோர் பிள்ளைகளுக்கிடையிலான உறவும் பலப்படுவது மிகவும் முக்கியமாகும். பெற்றோருக்கும் பிள்ளைகளுக்குமிடையிலான பலமான உறவு இல்லாவிட்டால் நாம் எத்தகைய அபிவிருத்தியை ஏற்படுத்தியும் அதில் பயனில்லை என்பதே எனது கருத்து. குடும்ப உறவு பலப்படுத்தப்படல், பொறுமை இவையிரண்டும் நல்ல குடும்பம், நல்ல பிள்ளைகள் உருவாக மிகவும் அவசியமாகும். குடும்பம் பலம்பெறும்போது சமூகம் பலம்பெறுகிறது. சமூகம் பலம் பெறும்போது கிராமம் பலம்பெறுகிறது. கிராமம் பலம்பெறும்போது நாடு பலம்பெறுகிறது. நாம் பலம்மிக்க நாடொன்றைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் உழைப்போம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.ஆயிரத்திற்கும் அதிகமான ஐ.தே.கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களும் ஆளும் கட்சியில் இணைவு..!
கண்டி மற்றும் கம்பளை தொகுதிகளைச் சேர்ந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், ஆதரவாளர்களுமாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் நேற்று முன்தினம் இணைந்து கொண்டனர். அமைச்சர் தி.மு. ஜயரட்ன முன்னிலையில் இவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் இணைந்தனர். கம்பளைத் தொகுதியிலுள்ள கஹவத்த, ஓராயன்வத்தை போன்ற பிரதேசங்களைச் சேர்ந்த ஐ.தே.க.ஆதரவாளர்களே இவ்வாறு ஐ.ம.சு.மு.வில் இணைந்து கொண்டவர்களாவர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை வலுப்படுத்துவதற்காகவே நாம் ஐ.ம.சு.மு.வுடன் இணைந்துள்ளோம். நாட்டின் எதிர்காலம் குறித்து அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத் திட்டங்கள் எமக்கு நம்பிக்கை தருவதாகவும், அதன் காரணத்தினால் மேலும் பல ஐ.தே.க. உறுப்பினர்கள் ஐ.ம.சு. முன்னணியில் இணையத் தயாராக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.நூறாவது சர்வதேச மகளிர் தினத்தையொட்டி அம்பாறையில் நிகழ்வுகள்..!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வன்னி தேர்தல்தொகுதி வேட்பாளர்கள் பிரச்சாரம்..!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் வன்னி தேர்தல்தொகுதி வேட்பாளர்கள் தமது பிரச்சார வேலைத்திட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வவுனியா மன்னார் முல்லைத்தீவு மாவட்டங்களுடைய அபிவிருத்தி மக்களுடைய அவசியதேவைகளை நிறைவேற்றவுள்ளதாகவே இவர்களும் வாக்குறுதியளித்து வருகின்றனர். சமீபத்தில் ஜனாதிபதியினை அனுராதபுரத்தில் சந்தித்த இந்த வேட்பாளர்கள் மாவட்ட அபிவிருத்தி இடம்பெயர்ந்த மக்களுடைய தேவைகள் குறித்து தெரிவித்திருந்தனர். குறிப்பாக வன்னி மாவட்ட அனைத்து தேவைகளும் பொதுத்தேர்தலின் பின்னர் நிவர்த்தி செய்யப்படும் என ஜனாதிபதி உறுதிமொழியளித்ததாக வன்னி மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.மன்னாரில் இருகட்சி ஆதரவாளர்களுக்கிடையில் மோதல், ஒருவர் படுகாயம்..!
திங்கள் இரவு 8மணியளவில் இருகட்சி ஆதரவாளர்களுக்கிடையில நடைபெற்ற மோதலில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மன்னார் அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.; காயமடைந்தவர் சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆதரவாளர் என கூறப்படுகின்றது. முஸ்லீம் காங்கிரஸ் மற்றும் ஐக்கியமக்கள் சுதந்தி;ர கூட்டமைப்பு ஆதரவாளர்களுக்கிடையில் மன்னார் நகரில் 8 மணியளவில் நடைபெற்ற கைகலப்பு மோதலாக மாறியுள்ளது. இதில் காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவ இடத்திற்கு பொலிசார் விரைந்து கூட்டத்தினரை கலைத்துள்ளனர் மன்ன்hரில் குறித்த இரு கட்சிகளின் ஆதரவாளர்கள் மத்தியில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் சுவரொட்டிகளை ஒட்டுவதில் முறுகல்நிலை ஏற்பட்டுவந்தது.ஓட்டிசுட்டான் கற்சிலைமடு மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதம்..!
ஓட்டிசுட்டான் கற்சிலைமடுவில் நிறுவப்பட்டிருந்த மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவுக்கல் சேதமாக்கப்பட்டுள்ளதுடன் அருகாமையில் இருந்த பண்டாரவன்னியன் சிலையும் காணாமல் போய்யுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 1803ம்ஆண்டு மாவீரன் பண்டாரவன்னியன் பிரித்தானிய இராணுவ கப்டன் ஒருவரனால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்தான். அன்றைய பிரித்தானிய ஆட்சியாளர்களினால் கற்சிலைமடுவில் மாவீரன் தோற்கடிக்கப்பட்டான் என்பதினை நினைவுபடுத்தும் கல் நாட்டப்பட்டு இதில் முக்கிய வாசகங்கள் பொறிக்கப்பட்டிருந்தது. நினைவுக்கல் சேதமாக்கப்பட்டமை வன்னிமக்களின் மனங்களை புண்படுத்தும் செயலாக அமைந்துள்ளதுசரண் அடைந்துள்ள இளைஞர்களின் ஒரு தொகுதியினரை பெற்றோர்களிடம் ஒப்படைக்க ஏற்பாடு..!
சரண் அடைந்துள்ள இளைஞர்களின் ஒரு தொகுதியினர் அடுத்த சில தினங்களில் பெற்றோர்களிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி கேட்போர் கூடத்தில் அமைந்திருந்த சரணடைந்த இளைஞர்களுடைய நிலையம் மூடப்பட்டுவிட்டது. வெளிக்குளம் மகாவித்தியாலயத்தில் தங்கியிருந்த ஒரு தொகுதி சரணடைந்த இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஜீ.சீ.ஈ சாதாரணதர பரீட்சை முடிவுகள் இம்மாத இறுதியில் வெளியாகும்..!
கடந்த டிசெம்பர் நடந்த ஜி.சீ.ஈ சாதாரணதரப் பரீட்சையின் முடிவுகள் மாதஇறுதியில் வெளியிடப்படும் என்று பரீட்சைத் திணைக்கள வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. செயல்முறைப் பரீட்சை முடிவுகள் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து இன்னமும் கிடைக்கவில்லை என்றும் அந்த முடிவுகள் கிடைத்து, பணிகளைப் பூர்த்திசெய்து முடிவுகள் மாத இறுதியிலேயே வெளியிடப்படும் என்றும் மேலும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பரீட்சை முடிவுகள் நேற்று வெளியாவ தாக வெளிவந்த தகவலையடுத்து மாணவ, மாணவிகள் நெற்கபேகளுக்கு படையெடுத்ததை அவதானிக்க முடிந்தது.திங்கள், 8 மார்ச், 2010
பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடுகிறது
கலைக்கப்பட்ட பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கூடவுள்ளது. அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்கான விவாதத்திற்காக ஜனாதிபதி தனது மேலான அதிகாரத்தின் மூலம் அதிகாரங்களைப் பயன்படுத்தி பாராளுமன்றத்தை கூடவுள்ளார். அவசரகால சட்த்தை நடைமுறைப்படுத்தும் வகையில் ஜனாதிபதி தலைமையில் கூடவுள்ள கூட்ட தொடரில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுத் தேர்தல் பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதால் பெரும்பாலான உறுப்பினர்கள் அமர்வில் கலந்துகொள்ள மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.யாழ். திருநெல்வேலியில் வர்த்தக நிலையம் தீக்கிரை, 30லட்சம் ரூபாய் பொருட்கள் எரிந்து நாசம்
யாழ்ப்பாணம் திருநெல்வேலி பிரதேசத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையமொன்றில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீவிபத்தானது இன்று அதிகாலை 2.30அளவில் இடம்பெற்றுள்ளதாக கோப்பாய் பொலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்தத் தீவிபத்து காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தில் இருந்து 30லட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரையாகியுள்ளதாக பொலீசார் குறிப்பிட்டுள்ளனர். இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் கோப்பாய் பொலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது புதிதாக தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட மாட்டாது -ஆட்பதிவு திணைக்களம்
நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின் போது புதிதாக தற்காலிக அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட மாட்டாதென ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. எனினும் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின்போது தேசிய அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு தற்காலிக அடையாள அட்iடைகள் விநியோகிக்கப்பட்டன. இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தலின்போது பெற்றுக் கொள்ளப்பட்ட தற்காலிக அடையாள அட்டைகளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலிலும் பயன்படுத்த முடியுமென ஆட்பதிவுத் திணைக்களம் அறிவித்துள்ளது. இவ்வருடம் நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களின்போதும் கிடைக்கப்பெற்ற தற்காலிக அடையாள அட்டைகளைப் பயன்படுத்த முடியுமெனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.ஜெனரல் சரத் பொன்சோகவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்கு தொடரப்படும்- பாதுகாப்பு தரப்பு
ஜெனரல் சரத் பொன்சோகவுக்கு எதிராக இராணுவ நீதிமன்றில் வழக்கு தொடரப்போவதாக பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது. பதவியிலிருந்த காலப்பகுதியில் இராணுவ சட்டத்திற்கு முரணாக செயற்பட்டதாக சுமத்தப்பட்டுள்ள 5ற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுக்ள் தொடர்பாகவே வழக்கு தொடரப்படவுள்ளதாக பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதனை முன்னிட்டு அடுத்துவரும் சில தினங்களில் இராணுவ நீதிமன்றத்திற்கான உறுப்பினர்களை நியமிக்கவுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் 35பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 22 இராணுவ அதிகாரிகள் 07பொலீஸ் அதிகாரிகள், 06 பொதுமக்கள் ஆகியோரிடமிருந்தே வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலங்கள் தொடர்பான அறிக்கையை இராணுவ சட்டப் பணிப்பாளர்கள் ஆய்வு செய்துள்ளதாக அவர் எடுத்துக் கூறியுள்ளார்.இலங்கையில் உள் விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாது -சம்பிக்க ரணவக்க
இலங்கையில் உள் விவகாரங்களில் தலையிட வெளிநாடுகளுக்கு எவ்வித உரிமையும் கிடையாதென சுற்றாடல் மற்றும் இயற்கைவள அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஐ.நா சபையின் பொதுச்செயலர் பான்கீ மூனுடன் தொலைபேசியில் உரையாடிய ஜனாதிபதியும் இதனையே கூறியதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும் நாட்டின் நல்லாட்சிக்காக தாம் முன்னின்று கடமையாற்றவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.கிழக்கு மாகாண முதலமைச்சர் இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிருபமா ராவ் சந்திப்பு
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தனை இந்தியாவுக்கு விஜயம் செய்யுமாறு நிருபமா அழைப்பு விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ் இன்று சிவனேசத்துரை சந்திரகாந்தனை கொழும்பில் சந்தித்துள்ளார். இதன்போதே இவ்வழைப்பை அவர் விடுத்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இச்சந்திப்புத் தொடர்பில் அவர் எமக்கு மேலும் தெரிவிக்கையில், நிருபமா ராவுடனான சந்திப்பின்போது கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி, பிரச்சினைகள், நிலைமைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதுடன் விதவைகளுக்கான உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. அத்துடன் அதிகாரப் பகிர்வு, 13வது திருத்தச் சட்டம் என்பன தொடர்பில் பேசப்பட்டது என்று தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு இந்தியா உதவும் எனவும் நிருமா ராவ் இதன்போது உறுதியளித்துள்ளார்.ஜனநாயக தேசிய முன்னணி தேசியப் பட்டியல் வேட்பாளர் டிரான் அலஸிடம் விசாரணை
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேக்காவுக்கு உதவியமை தொடர்பில் ஜனநாயக தேசிய முன்னணியின் தேசியப்பட்டியல் வேட்பாளர் டிரான் அலஸிடம் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் இன்று விசாரணை நடத்தியுள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவினர். சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தி அலஸின் வாக்குமூலத்தை பதிவுசெய்து கொண்ட பின்னர் அவரை விடுவித்துள்ளனர். ஜனாதிபதித் தேர்தலில் பொன்சேக்காவின் தேர்தல் பிரசாரத்திற்கு உதவி செய்தீர்களா?. அவரது தனிப்பட்ட பாதுகாப்புக்காக எந்த வகையிலாவது பாதுகாப்பு வழங்கினீர்களா?. ஜனாதிபதித் தேர்தல் காலத்திலும் அதற்கு பின்னரும் பொன்சேக்கா வசிப்பதற்காக வசதிகளுடன் பாதுகாப்பு வழங்கினீர்களா?. அவருக்கு தொலைபேசி வசதிகளை ஏற்படுத்தி கொடுத்தீர்களா?. போன்ற கேள்விகளை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் டிரான் அலஸிடம் கேட்டுள்ளனர். அதேவேளை ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற தினம் இரவு சினமன் லேக் சைட் விடுதியில் அறைகளை ஒதுக்கி, அவற்றுக்கு யார் பணம் செலுத்தினர் எனவும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கேட்டுள்ளனர். டிரான் அலஸ் பலமுறை ரகசிய பொலீசாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார். அரசாங்கத்தின் கடும் நெருக்கதலுக்கு உள்ளாகியிருக்கும் டிரான் அலஸின் வீட்டின்மீது அண்மையில் குண்டு தாக்குதல் நடத்தி பெரும் சேதம் விளைவிக்கப்பட்டது. சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் செயலாளராக பணியாற்றிய அலஸ், அதன் தலைவர் மங்கள சமரவீர எதிர்வரும் பொதுத் தேர்தலில் யானைச் சின்னத்தில் போட்டியிட தீர்மானித்ததை தொடர்ந்து அக்கட்சியில் இருந்த விலகி ஜனநாயக தேசிய முன்னணியில் இணைந்து கொண்டார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)





உடனுக்குடன் இலங்கைக்கான நாணயமாற்று விகிதம் 

