இலங்கையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் விசேட தேவையுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்லாந்தில் வாழும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் சமூக ஆர்வலர்களால் முனைப்பு எனும் பெயரில் சமூகநலன் சார்ந்த அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்குராப்பணக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். தங்கள் அமைப்பால் இனங்காணப்பட்ட சில திட்டங்களை மிகவிரைவில் இலங்கையில் அமுல்படுத்தப் படவுள்ளதுடன், முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் சில பிரதேச செயலகப் பிரிவுகளில் தமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளுக்கும் தமது வேலைத்திட்டங்கள் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் திருமலை மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இவ்வமைப்பில் அங்கத்துவம் வகிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
வறிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்த சுவிஸ்லாந்தில் வாழும் கிழக்கு மாகாண தமிழ்பேசும் மக்களால் அமைப்பொன்று உருவாக்கம்
இலங்கையில் வறுமைக்கோட்டின்கீழ் வாழும் விசேட தேவையுடைய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் சுவிஸ்லாந்தில் வாழும் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த தமிழ்பேசும் சமூக ஆர்வலர்களால் முனைப்பு எனும் பெயரில் சமூகநலன் சார்ந்த அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான அங்குராப்பணக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சூரிச்சில் நடைபெற்றது. இதில் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பெருந்தொகையான மக்கள் கலந்துகொண்டனர். தங்கள் அமைப்பால் இனங்காணப்பட்ட சில திட்டங்களை மிகவிரைவில் இலங்கையில் அமுல்படுத்தப் படவுள்ளதுடன், முதற்கட்டமாக கிழக்கு மாகாணத்தில் சில பிரதேச செயலகப் பிரிவுகளில் தமது வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் ஏனைய பகுதிகளுக்கும் தமது வேலைத்திட்டங்கள் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அமைப்பின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார். அத்துடன் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் திருமலை மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் இவ்வமைப்பில் அங்கத்துவம் வகிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

உடனுக்குடன் இலங்கைக்கான நாணயமாற்று விகிதம் 

0 Kommentare:
கருத்துரையிடுக