முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் ரஜகீத மாவத்தையில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து நேற்றிரவு சுமார் 8மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கைது செய்யப்பட்டுள்ளமை இராணுவப்பேச்சாளர் மேஜர்ஜெனரல் பிரசாட் சமரசிங்கவினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை இவருடன் அவரது ஊடகச் செயலாளர் சேனக டி சில்வா அவர்களும் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என்று முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா திங்கட்கிழமை கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். கொழும்பில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த பொன்சேகா மேலும் தெரிவிக்கையில், இலங்கையின்; போர்க்குற்றங்கள் தொடர்பாக எனக்கு தெரிந்தவை, நான் கேள்விப்பட்டவை, எனக்கு தெரியப்படுத்தப்பட்டவை அனைத்தையும் நிச்சயம் வெளியிடவுள்ளேன். போர்க்குற்றங்கள் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்தார். எனவே இவ்வாறு செயதியாளர்களிடம் தெரிவித்ததையடுத்தே பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
செவ்வாய், 9 பிப்ரவரி, 2010
முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகா கைது விடயம்..!

இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

உடனுக்குடன் இலங்கைக்கான நாணயமாற்று விகிதம் 

0 Kommentare:
கருத்துரையிடுக